உலகக் கிண்ணம்; ஈரான் தகுதி
2017-06-13 18:53:31 | General

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'பிபா' உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு ஈரான் அணி முன்னேறியது.  


ரஷ்யாவில் அடுத்த ஆண்டு 'பிபா' உலகக் கிண்ண (ஜூன் 14ஜூலை 15) கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான, ஆசிய அணிகளுக்கிடையிலான தகுதிப் போட்டியின் மூன்றாவது சுற்று தற்போது நடக்கிறது. 


இதில் ஈரான், உஸ்பெகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட 12 அணிகள் தலா 6 அணிகள் என இரு பிரிவுகளாக மோதுகின்றன. இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும்.  


ஈரான் முன்னேற்றம்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் சர்தார் அஸ்மவுன் (23) மெகதி (88 ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடிக்க, ஈரான் அணி 20 என வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம், ஈரான் அணி 'ஏ' பிரிவில் 8 போட்டியில் 6 வெற்றி, இரண்டு 'டிரா' பெற்று 20 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டியில் வீழ்ந்தாலும் முதலிடத்தை இழக்க வாய்ப்பில்லை. இதன்மூலம், உலகக்                     கிண்ணத் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக (2014,2018) முன்னேறியது.   

 

TOTAL VIEWS : 337
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
d1xqs
  PLEASE ENTER CAPTA VALUE.