ஆஸி. அணிக்கு பொண்டிங் பயிற்சியாளர்?
2018-01-02 11:33:59 | General

2020ஆம் ஆண்டு ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு உலகக் கிண்ணத்தை (2003, 2007) பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவர். அவுஸ்திரேலிய அணியின் வெற்றி மற்றும் வரலாற்றுமிக்க கப்டன் ஆவார்.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஐ.சி.சி. 20 ஓவர் உலக கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அவருடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொண்டிங் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி இருந்தார். 

பெப்ரவரி மாதம் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டிக்கும் அவர் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் லீமனின் ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு முடிகிறது. 20 ஓவர் அணிக்கு பொண்டிங்கை பயிற்சியாளராக நியமிப்பதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஆர்வத்துடன் இருக்கிறது.

2020 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. அவுஸ்திரேலிய அணி இதுவரை 20 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்றது இல்லை.

இதனால் பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி 2010 ஆம் ஆண்டு 2 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

 

TOTAL VIEWS : 132
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bl8fe
  PLEASE ENTER CAPTA VALUE.