200ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உபுல் தரங்க
2017-03-27 14:13:13 | General

இலங்கை ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க செவ்வாய்க்கிழமை (28) தனது 200 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.


இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி தம்புள்ள மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இலங்கை அணி இதில் 90 ஓட்டங்களால் மோசமான தோல்வியை சந்தித்தது.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (28) 2ஆவது ஒருநாள் போட்டி தம்புள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணித் தலைவர் உபுல் தரங்கவிற்கு இன்றைய போட்டி 200 ஆவது ஒருநாள் போட்டியாகும். 


32 வயதான உபுல் தரங்க 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மேற்கிந்தியாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியிருந்தார். அதன்பின் அவர் இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 


கடந்த சில வருடங்களாக அணியில் இடம்பெறாதிருந்த இவர், அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலர் அடுத்தடுத்து ஓய்வுபெற்ற நிலையில் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் காயம் காரணமாக ஓய்வு பெற்று வரும் நிலையில், உபுல் தரங்க அணித் தலைவராகவும் இருக்கின்றார்.

இவர் இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 188 இனிங்ஸ்களில் ஆடி 5,829 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், ஆட்டமிழக்காது பெற்ற 174 ஓட்டமே இவரது ஒரு போட்டியின் அதிகூடிய ஓட்டமாகும்.


இதேவேளை 27 டெஸ்ட் போட்டிகளில் 50 இனிங்ஸ்களில் ஆடி 1,568 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிகூடுதலாக 165 ஓட்டத்தை பெற்றுள்ளார். ரி20 போட்டியில் 14 ஆட்டங்களில் பங்கேற்று 169 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

 

TOTAL VIEWS : 573
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fko1o
  PLEASE ENTER CAPTA VALUE.