ரியல் மாட்ரிட் அணி சம்பியன்
2017-08-11 10:27:14 | General

சுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


மாசிடோனியாவில் சுப்ப கிண்ண கால்பந்து போட்டி நடந்தது. இதில் சம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் நடப்பு சம்பியன்களான முறையே ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் யுனைடெட் ( இங்கிலாந்து ) அணிகள் மோதின.


அபாரமாக ஆடிய "நடப்பு சம்பியன்' ரியல் மாட்ரிட் அணி  2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது. ரியல் மாட்ரிட் சார்பில் கேஸ்மிரோ (24 ஆவது நிமிடம்), இஸ்கோ ( 52 ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு லுகாகு ( 62 ஆவது நிமிடம் ) ஆறுதலளித்தார்.


இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி, நான்காவது முறையாக 
( 2002, 2014, 2016,2017) சுப்ப கிண்ணத்தை வென்றது. பார்சிலோனா ( ஸ்பெயின் , 1992,1997,2009,2011, 2015) மிலன் ( இத்தாலி, 1989,1990,1994,2003, 2007) அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சுப்ப கிண்ணத்தை வென்றுள்ளன.

TOTAL VIEWS : 358
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
o6znd
  PLEASE ENTER CAPTA VALUE.