இரு நாட்களில் முடிந்த போட்டி; 10 விக்கெட்கள் வீழ்த்தி அமீர் அசத்தல்
2017-08-10 15:24:42 | General

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமட் அமீர் கவுண்டி சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்கள் எடுத்து அசத்த, இந்தப் போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது.


இங்கிலாந்து கவுண்டி சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமட் அமீர் எசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


இந்நிலையில் எசக்ஸ் அணிக்கும் யோர்க்சைர் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதல் இனிங்ஸில் யோர்க்சைர் அணி 113 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.


அடுத்து முதல் இனிங்ஸை தொடங்கிய எசக்ஸ் அணி 231 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.


இதைத் தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய யோர்க்சைர் அணி 150 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் எசக்ஸ் அணிக்கு 33 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


33 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எசக்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இப்போட்டியில் எசக்ஸ் அணி சார்பில் மொகமட் அமீர் முதல் இனிங்ஸ் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்து எசக்ஸ்  அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
மேலும் இப்போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 411
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4amdk
  PLEASE ENTER CAPTA VALUE.