மெஸ்ஸியின் கோலை நிராகரித்த நடுவர்
2017-11-29 09:46:01 | General

மெஸ்ஸியின் அழகான கோலை நடுவர் மறுத்ததால், லா லிகாவில் வாலென்சியாவிற்கு எதிரான ஆட்டத்தை பார்சிலோனா 11 என டிரா செய்தது.
லா லிகா கால்பந்து லீக் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னணி கிளப் அணியான பார்ஸிலோன வாலென்சியாவை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் எல்லையை நோக்கி பந்தை உதைத்தார். அந்தப் பந்தை வாலென்சியா கோல்கீப்பர் தடுத்தார். ஆனால், பந்து அவரது கையில் பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. கோல் எல்லை கோட்டை தாண்டி பந்து சென்றது. கோல் காப்பாளர் அந்தப் பந்தை வெளியில் தட்டிவிட்டார்.

அதுகோல்தான் என்பது டி.வி.யில் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தெரிந்தது. ஆனால் நடுவர் கோல் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மெஸ்ஸி உட்பட பார்சிலோனா வீரர்கள் விரக்தியடைந்தனர்.

பின்னர் 60 ஆவது நிமிடத்தில் வீரர் ரொட்ரிகோ முதல் கோலை பதிவு செய்தார். இதற்குப் பதில் கோலாக 82 ஆவது நிமிடத்தில் அல்பா கோல் அடிக்க ஆட்டம் 11 என டிராவில் முடிந்தது. மெஸ்ஸி அடித்த பந்து கோலாக அனுமதி அளித்திருந்தால் பார்சிலோனா 21 என வெற்றிபெற்றிருக்கும்.

வாலென்சியாவிற்கு எதிரான போட்டி டிரா ஆனதால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகள் இழந்து 13 போட்டியில் 11 வெற்றி, இரண்டு டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று பார்சிலோனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாலென்சியா 13 போட்டியில் 9 வெற்றி, 4 டிரா உடன் 31 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளது.

TOTAL VIEWS : 154
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kanh8
  PLEASE ENTER CAPTA VALUE.