உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக டனிஸ்ரன் விஜயகுமார் நியமனம்
2017-03-22 23:55:22 | General

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழின்  முதலாவது  இளையோர் உதைபந்தாட்ட பயிற்சிக்கல்லூரியின்  தலைமைப் பயிற்றுவிப்பாளராக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் பயிற்றுநர்  ம.டனிஸ்ரன் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 

இலங்கை உதைபந்தட்ட சம்மேளனத்தின்  ஆ தர பயிற்சிச் சான்றிதழைப் பூர்த்திசெய்துள்ள இவர் கடந்தகாலங்களில் பல இளம் வீரர்களின் உதைபந்தாட்ட வளர்ச்சியிலும் தேசிய ரீதியில் கல்லூரி அணிகளின் வெற்றிகளிலும் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
 

இலங்கை உதைபந்தாட்ட எதிர்கால வளர்ச்சி கருதியும்,அடிமட்ட உதைபந்தாட்ட பயிற்சிகளின்  முக்கியம் கருதியும் இவ் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சிக் கல்லூரியில் 6-16 வயதுக்கிடையிலான இளம் வீரர்கள் இரு பிரிவுகளாக பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்காலத்தில் இலங்கை அணியை வலுப்படுத்தும் பல வீரர்களை உருவாக்கும் நோக்குடன் இப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.


இப்பயிற்சிக் கல்லூரி ஏ9 வீதியில் அரியாலையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

TOTAL VIEWS : 211
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wrsq8
  PLEASE ENTER CAPTA VALUE.