விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது
2017-03-31 09:24:24 | General

தேசிய அளவில் சாதனை புரிந்தோருக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், பா.ஜ.கவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்‌ஷி மலிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வீரர் சேகர் நாயக்கிற்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் இலக்கியத்துக்கான பத்ம விபூஷண் விருது, தேவிபிரசாத் திவேதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடகி அனுராதா பட்வாலுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

TOTAL VIEWS : 445
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pex9u
  PLEASE ENTER CAPTA VALUE.