சாதனைக்கு காத்திருக்கும் ஸ்ரெயின்
2018-01-03 11:37:46 | General

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்க வீரர் ஸ்ரெயின் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கேப்டவுணில் தொடங்குகிறது.

தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரெயின் அணிக்குத் திரும்பியுள்ளார். தோள்மூட்டுக் காயம் காரணமாக அவதிப்பட்ட ஸ்ரெயின், 14 மாதங்களுக்குப் பிறகு விளையாடவுள்ளார்.

தென் ஆபிரிக்க வீரர்களில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் முதலிடத்தைப் பிடிக்க ஸ்ரெயினுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை. அவர் 85 டெஸ்டில் விளையாடி 417 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முதல் இடத்தில் முன்னாள் கப்டனான ஷோன் பொலொக் 198 டெஸ்டில் 421 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரெயின் புதிய சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது. காயத்தில் இருந்து மீண்ட அவரது பந்துவீச்சு எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை.

இருந்தபோதிலும் அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என்று இரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

TOTAL VIEWS : 205
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
of6sd
  PLEASE ENTER CAPTA VALUE.