இங்கிலாந்து ஊடகம் மீது பாய்ச்சல்
2016-11-24 16:36:32 | General

கப்டன் விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து ஊடகத்தின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளார். 


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த  2 ஆவது டெஸ்டில் இந்தியா 246 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 


இதற்கிடையே ராஜ்கோட்  டெஸ்டில் இந்திய அணி கப்டன் விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று குற்றஞ்சாட்டியது. பந்தை பளபளப்பு தன்மைக்கு மாற்ற அவர் ஒரு பொருளை தேய்ப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தது. 


டெஸ்ட் போட்டி முடிந்த 5 நாட்களில் தான் இது போன்ற புகாரை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் சபை) கொடுக்க இயலும். ஆனால், 10 நாட்கள் கழித்து இங்கிலாந்து ஊடகம் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டியது. அதேநேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் இதுபற்றி எதுவும் முறையிடவில்லை.


இதற்கிடையே இங்கிலாந்து ஊடகத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; 


விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தவில்லை. பொதுவாகவே இங்கிலாந்து அணி தோல்வியடைந்தவுடன் சில விடயங்களில் பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கும். இதை வீரர்களுக்குப் பதிலாக இங்கிலாந்து ஊடகம் செய்துள்ளது. தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். 


வெளிநாட்டில் நாம் தோற்றால் தோல்விக்கு சாக்கு போக்கு சொல்ல மாட்டோம். நாங்கள் சரியாக விளையாடாததால் தோற்றோம் என்று தோல்வியை ஒப்புக் கொள்வோமென ஷேவாக் கூறியுள்ளார்.

TOTAL VIEWS : 1032
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
c0zjx
  PLEASE ENTER CAPTA VALUE.