தென் ஆபிரிக்க தொடரை ஆஸி. வீரர்கள் புறக்கணிப்பு
2017-07-06 15:51:38 | General

வீரர்களுக்கான புதிய சம்பள  ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த அவுஸ்திரேலிய ஏ அணியினர் தென்  ஆபிரிக்க தொடரை புறக்கணித்தனர். அவுஸ்திரேலிய வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்தது. 


புதிய ஒப்பந்தத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ( சி.ஏ.) ஏற்படுத்தியது. இதனை ஏற்க வீரர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். போட்டிகளை புறக்கணிப்போம் எனவும் எச்சரித்திருந்தனர்.


இந்நிலையில் தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய ஏ அணிகளுடன் தென் ஆபிரிக்காவில் எதிர்வரும் 12 இல் தொடங்கவிருந்த தொடரை அவுஸ்திரேலிய ஏ அணி புறக்கணித்தது. கவாஜா தலைமையிலான இந்த அணியில் டிராவிட் ஹெட், மெக்ஸ்வெல் இடம்பிடித்திருந்தனர்.


தீர்வு இல்லை

அவுஸ்திரேலிய வீரர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த விவகாரத்தில் தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. அவுஸ்திரேலிய ஏ அணியினர் தென் ஆபிரிக்க தொடரில் விளையாட மறுத்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் சம்பள ஒப்பந்தம் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய ஏ அணி தென் ஆபிரிக்க தொடரை புறக்கணித்தது ஏமாற்றமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளம் அணியைப் போல  சிரேஷ்ட வீரர்களும் எதிர்வரும் பங்களாதேஷ் இந்தியாவுக்கு எதிரான தொடரை புறக்கணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

TOTAL VIEWS : 337
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tggm0
  PLEASE ENTER CAPTA VALUE.