''திலங்கவிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்த வேண்டும்''
2017-08-11 10:14:34 | General

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபாலவிடம் சர்வதேச கிரிக்கெட் சபை ( ஐ.சி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் கப்டனும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கை அணி அண்மைக்காலமாக மோசமான தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், இலங்கை அணி குறித்தும் அணி நிர்வாகம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அண்மைக்காலமாக அர்ஜுன ரணதுங்கவும் இலங்கை கிரிக்கெட் சபையையும் அதன் நிர்வாகத்தையும் கடுமையாக சாடி வருகிறார்.

சூதாட்டத்தை தங்கள் குடும்பத் தொழிலாக கொண்டவர்களே இன்று இலங்கை அணியை நிர்வகிப்பதாகவும் விளையாட்டிலிருந்து சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என உலகளாவிய ரீதியில் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகையில் ஐ.சி.சி.யும்  அதனை ஆதரிப்பதாகவும் ஆனால், இலங்கையில் சூதாட்டக் காரர்கள் கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதை ஏன் தடுத்து நிறுத்தாதிருப்பதாகவும் ரணதுங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.


சூதாட்டக்காரர்கள் நிர்வகிக்கும் அணி எவ்வாறு ஒழுங்கீனமாக இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ள அவர்,  இதனை தடுத்து நிறுத்துவதற்காக ஐ.சி.சி. திலங்க சுமதிபாலவிடம் விசாரணை நடத்தி அவரை அணி நிர்வாகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.


ஐ.சி.சி.க்கு முதுகெலும்பு இருக்குமானால்  இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி அவர்களை அணிகளை  நிர்வகிப்பதிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை  கடந்த வாரமும் ரணதுங்க இதேபோன்றதொரு கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் ஐ.சி.சி. இதுவரை அதுகுறித்து எதுவித கருத்தையும் தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 106
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zmg0m
  PLEASE ENTER CAPTA VALUE.