2019 உலகக் கிண்ணத்தில் மலிங்க விளையாடுவாரா?
2017-06-13 17:59:18 | General

2019இல் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் லசித் மலிங்க ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரில் திங்களன்று முக்கியமான போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 


போட்டி முடிந்த பின்னர் மத்யூஸ்  ஊடகவியலாளரை சந்தித்த போது, மலிங்கவை 2019 ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பினர். 


அதற்கு மத்யூஸ் பதிலளிக்கையில்; இதை என்னால் நிச்சயமாக கூறமுடியாது, இடையில் எதுவும் நடக்கலாம். அவர் தலைசிறந்த பந்து வீச்சாளர். இந்தப் போட்டியில் கூட சிறப்பாக  பந்து வீசியதுடன், தன்னால் எந்தளவிற்கு அணிக்கு உதவ முடியுமோ அந்தளவிற்கு உதவினார். 


ஆனால் பாகிஸ்தான் போட்டியில் அவரின் ஓவரில் கேட்சை தவற விட்டுவிட்டோம். அவர் இலங்கை அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர். வெவ்வேறு விதமாக பந்து வீசும் திறன் உடையவர் என்று கூறினார். 


மேலும் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம், இக்கட்டமான தருணத்தில் சில கேட்சுகளை தவற விட்டது தான் என்று கூறினார்.  

 

TOTAL VIEWS : 335
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
x5yyy
  PLEASE ENTER CAPTA VALUE.