ஒரு நாள்போட்டியில் தோனி பங்கேற்க தடை
2016-12-05 17:32:53 | General

இந்திய அணியின் கப்டன் தோனி இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


டெஸ்ட் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று ருவென்ரி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.


இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் ஜனவரி 15ம் திகதி நடைபெறவுள்ளது.


இந்நிலையில் தோனி கடைசியாக அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் எந்த போட்டியிலும் பங்கேற்வில்லை. 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ )விதிகளின்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டோனி பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.


இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் டோனி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது.

 

TOTAL VIEWS : 1128
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
a8dnw
  PLEASE ENTER CAPTA VALUE.