பெடரர் சம்பியனானார்
2017-03-20 18:01:33 | General

பரிபாஸ் ஓப்பன் டெனிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சம்பியன் பட்டம் வென்றார். இறுதியாட்டத்தில் சக வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.


அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓப்பன் மாஸ்டர் ஸ்  டெனிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர்  வாவ்ரிங்கா மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 64, 75 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக (200406, 2012, 2017) சம்பியன் பட்டம் வென்றார்.


இதன் மூலம் இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் (2008, 2011, 201416) முதலிடத்தை பகிரந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 5 முறை வென்றுள்ளார்.


இது தவிர அதிக வயதில் மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற ஏ.டி.பி. தொடரில் கிண்ணம் வென்ற வீரர் என்ற பெருமை பெற்றார் பெடரர் (35 வயது). இதற்கு முன் அமெரிக்காவின் அன்ட்ரே அகாசி 34 வயதில் சின்சினாட்டி ஓப்பனில் (2004) சம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது ஏ.டி.பி. அரங்கில் வாவ்ரிங்காவுக்கு எதிராக பெடரர் பெற்ற 20 ஆவது வெற்றி.


இதுவரை இவர்கள் இருவரும் 23 முறை மோதியுள்ளனர். இதில் பெடரர் 20, வாவ்ரிங்கா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.


வெஸ்னினா அபாரம்: பெண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் ரஷ்யாவின் கஸ்னட்சோவா  எலினா வெஸ்னினா மோதினர். அசத்தலாக ஆடிய வெஸ்னினா 67, 75, 64 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக கிண்ணம் வென்றார். 

TOTAL VIEWS : 467
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
eux5o
  PLEASE ENTER CAPTA VALUE.