பெடரரிடம் வீழ்ந்த நடால்
2017-03-17 18:21:58 | General

பரிபாஸ் ஓப்பன் டெனிஸ் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் சுவிற்சர்லாந்தின் பெடரர் 62, 63 என ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். 

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் சுவி    சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர். 

அபாரமாக ஆடிய பெடரர் 62, 63 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு நான்காவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 46, 67 என்ற நேர் செட் கணக்கில் அவு ஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். 


மற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் ஜெய் நிஷிகோரி, சுவிற்சர்லாந்தின் வாவ்ரின்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

TOTAL VIEWS : 601
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fz7qq
  PLEASE ENTER CAPTA VALUE.