இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக ஹத்துருசிங்க?
2017-11-10 10:20:54 | General

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகும் வாய்ப்பு  முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு கிடைக்கலாமென கூறப்படுகிறது. 


அண்மைக் காலமாக நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் இல்லாத நிலையில், இலங்கை அணி மோசமாக ஆடி வருவதுடன், தொடர்ச்சியாக தோல்விகளையும் சந்தித்து வருவதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 


கடந்த ஜூன் மாதத்தில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் அணியிலிருந்து வெளியேறியதையடுத்து, உடற்பயிற்சியாளரான நிக் போத்தாவே அணியின் தற்காலிக பயிற்சியாளராக இருந்து வருகிறார்.


இந்த நிலையில் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் தேடப்பட்டு வருகிறார்.முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் மூவர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே உட்பட பலர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளரான ஹத்துருசிங்கவை இலங்கை அணியின் பயிற்சியாளராக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது.


இது தொடர்பாக அவருடன் கிரிக்கெட் சபை நிர்வாகம் பேச்சுகள் நடத்தி உடன்பாடு ஒன்றுக்கு வந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தற்போது பங்களாதேஷின் பயிற்சியாளராக இருக்கும் இவரை, அந்த நாடு இழக்க விரும்பாத நிலையில், அவரது  சிறந்த சேவையைப் பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக அவருக்கு சிறந்த கொடுப்பனவை வழங்கி 2019 ஆம் ஆண்டு முடிவு வரை அவரை அணியின் பிரதம பயிற்சியாளராக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எனினும் புதிய பயிற்சியாளர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் விரைவில் புதிய பயிற்சியாளருக்கான தெரிவு முடிவடைந்து விடுமெனவும் கிரிக்கெட் சபை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. 


ஹத்துருசிங்க இலங்கையின் முன்னாள் வீரராவார். 49 வயதான இவர் இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணியை உலகில் இன்று சிறந்த அணியாக மாற்றியமைத்த முன்னாள் இலங்கை வீரரை இலங்கை அணியும் பயன்படுத்துவதற்கு தற்போது முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

TOTAL VIEWS : 149
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uar1v
  PLEASE ENTER CAPTA VALUE.