வெற்றிக் கிண்ணத்தை பங்களாதேஷ் அணியே எடுத்துச் செல்லும்
2017-03-20 17:47:29 | General

இலங்கை  பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 11 என வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தாலும் வெற்றிக் கிண்ணத்தை பங்களாதேஷ் அணியே எடுத்துச் செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதேநேரம், கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. 


இதையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கிண்ணத்தை இரு அணித் தலைவர்களும் ஒன்றாக பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம், இந்தத் தொடர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.


வழமையாக ஏதாவது ஒரு தொடர் சரிசமமாக வெற்றி தோல்வியினறி முடிவடைந்தால் அந்த வெற்றிக் கிண்ணமானது போட்டியை நடத்தும் நாட்டு அணியிடமே ஒப்படைக்கப்படுவது வழமை. 


ஆனால், இந்தத் தடவை பங்களாதேஷ் அணி தான் பங்கேற்ற 100 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது. 


இதனால், அந்த அணியை கௌரவிக்கும் நோக்கில், வெற்றிக் கிண்ணத்தை பங்களாதேஷ் அணியிடமே இலங்கை கிரிக்கெட் சபை கையளிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 517
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b4zsj
  PLEASE ENTER CAPTA VALUE.