10ஆவது முறையாக நடால் சம்பியன்
2017-06-12 17:14:11 | General

பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10 ஆவது முறையாக கிண்ணம் வென்று சாதித்தார். இறுதியாட்டத்தில் சுவிற்சர்லாந்தின் வாவ்ரின்காவை எளிதாகத் தோற்கடித்தார்.


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 3 சுவிற்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா  4ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.

தொடக்கத்தில் இருந்து நடால் ஆதிக்கம் செலுத்தினார். 2 மணி நேரம் 5 நிமிடம் வரை நீடித்த போட்டியில் நடால் 62, 63, 61 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக (200508, 201014, 2017) கிண்ணம் வென்றார்.


புதிய சாதனை இதன் மூலம் நடால் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் 10 முறை கிண்ணம் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். தவிர இந்த இலக்கை எட்டிய 2 ஆவது டெனிஸ் நட்சத்திரமானார்.


ஏற்கனவே அவுஸ்திரேலிய ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலியாவின் மார்க்ரேட் கோர்ட் 11 முறை  வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த மொன்டி கார்லோ பார்சிலோனா ஓப்பன் தொடர்களில் நடால் தனது 10 ஆவது பட்டம் வென்றார். 


15 ஆவது பட்டம் இது நடால் கைப்பற்றிய 15 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் பீட் சாம்பிராசை (14 பட்டம்) முந்தி 2 ஆவது இடம் பிடித்தார். முதலிடத்தில் சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (18 முறை) உள்ளார்.


30 கோடி ரூபா பரிசு பிரெஞ்சு ஓப்பன் கிண்ணம் வெற்றி பெற்ற நடாலுக்கு சம்பியன் கிண்ணத்துடன்  30 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த வாவ்ரின்கா சுமார்  15 கோடி ரூபா பரிசு வென்றார். 

 

TOTAL VIEWS : 346
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cz9xr
  PLEASE ENTER CAPTA VALUE.