பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை அணி மறுப்பு
2017-07-06 15:38:39 | General

பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது. 


பாகிஸ்தானுக்கு எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்  வந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. 


இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த அழைப்பை இலங்கைக் கிரிக்கெட் சபை மறுத்துள்ளதுடன், பொது இடமொன்றில் பாகிஸ்தான் அணியுடன், கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. 


2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் மார்ச் மாதம் 3 ஆம் திகதி லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். 


இந்தத் தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் எவருக்கும் உயிராபத்து  எதுவும் ஏற்படாத போதிலும்  4 வீரர்கள் காயமடைந்ததுடன், இவர்களது பாதுகாப்புக்குச் சென்ற பாகிஸ்தான் பொலிஸார் நால்வர் கொல்லப்பட்டனர்.


இதையடுத்து அந்த நாட்டுக்கு இதுவரை எந்தவொரு சர்வதேச அணியும் கிரிக்கெட் விளையாட செல்லாத அதேநேரம், பாகிஸ்தானுடனான போட்டிகள் பொது இடமொன்றிலேயே நடைபெற்று வருகின்றன. 


இந்த நிலையில், பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்குமாறு இலங்கை அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்தவாரம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 


எனினும், பாதுகாப்புக் குழு எதனையும் அங்கு அனுப்பாத இலங்கைக் கிரிக்கெட் சபை, இலங்கை அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டாதென தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இவ்விரு நாடுகளுக்குமிடையே டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் ரி  20 போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

TOTAL VIEWS : 356
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
y4aqb
  PLEASE ENTER CAPTA VALUE.