அதிக தொடர் வென்ற ஆசிய கப்டன்
2016-10-26 16:00:33 | General

மேற்கிந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வென்ற மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி கைப்பற்றிய 10 ஆவது தொடர் இதுவாகும்.

இதன் மூலம்  அதிக டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கப்டன் என்ற பெருமையை மிஸ்பா பெற்றார்.


 அடுத்த இடங்களில் இந்தியாவின் கங்குலி, தோனி உள்ளனர். இருவரும் தலா 9 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய 2 ஆவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை யாசிர் ஷா பிடித்தார். இவர் இங்கு 9 போட்டியில் விளையாடி 59 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். முதலிடத்தை பாகிஸ்தானின் சயீத்  அஜ்மல் ( 12 போட்டி, 67 விக்,) வகிக்கிறார்.


கடந்த ஜூலையில் லோர்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் யாசிர் ஷா  இரு இனிங்ஸையும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியிலும் இதேபோல ( 10 விக்). செயல்பட்டார். இதன்மூலம் ஒரே ஆண்டில் இருமுறை டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய 7 ஆவது பாகிஸ்தான் பந்து வீச்சாளரானார்.

 டெஸ்ட் அரங்கில் 18 போட்டியில் விளையாடி 112 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜியார்ஜ் லோக்மன், பார்னஸுடன் முதலிடத்தை யாசிர் ஷா பகிர்ந்து கொண்டார்.

TOTAL VIEWS : 353
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
idcu8
  PLEASE ENTER CAPTA VALUE.