கண்ணீருடன் நடுவரிடம் மன்னிப்பு கோரிய வீரர் (வீடியோ)
2018-01-03 11:27:32 | General

களத்தில் நடுவரை திட்டிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் தனது தவறுக்கு கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சபீர் ரஹ்மான் இவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பி. பிரிவில் ஒப்பந்தம் செய்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த தேசியப் போட்டியொன்றில் நடுவர் மற்றும் ரசிகர் ஒருவரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் நடுவரை களத்தில் மோசமாக வசை பாடியுள்ளார்.

அதன்பின்னர் போட்டி முடிந்ததும் சபீர் ரஹ்மான் தனது தவறுக்கு நடுவரிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுள்ளார். இதற்கு முன்பு சபீர் இதேபோல இருமுறை நடுவரிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது அவருக்கு சிறிய அளவிலான அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன்  அவரை அணியிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது. மேலும் 6 மாதம் கிரிக்கெட் விளையாட தடையும் மூன்று கோடி ரூபா அபராதமும் விதித்துள்ளது.

இந்த அபராதத் தொகையை தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் அவர் செலுத்த வேண்டுமெனக் கூறப்படுகிறது. 

 

TOTAL VIEWS : 251
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
8vljg
  PLEASE ENTER CAPTA VALUE.