மனமுடைந்து போன ரொனால்டோ
2017-11-08 09:50:58 | General

லா லிகா தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கோல் அடிக்க முடியாத ரொனால்டோ மனமுடைந்துள்ளார் என்று ரியல் மாட்ரிட் கப்டன் செர்ஜியோ ரமோஸ் கூறியுள்ளார். 


போர்த்துக்கல் கால்பந்து அணியில் கப்டனாக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்கிறார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி லா லிகா மற்றும் ஐரோப்பிய சம்பியன் லீக் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 


தற்போது 201718 லா லிகா சீசன் நடைபெற்று வருகிறது. ரியல் மாட்ரிட் 11 ஆட்டங்கள் முடிவில் 3வது இடத்தையே பிடித்துள்ளது. இந்த சீசன் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு சிறந்ததாக அமையவில்லை.

கடைசி மூன்று போட்டிகளில் கோல்களே அடிக்கவில்லை.  ஞாயிறு நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் லாஸ் பால்மாஸ் அணியை 30 என ரியல் மாட்ரிட் வீழ்த்தியிருந்தது. 


ஒரு கோல் அடிக்க கிறிஸ்ரியானோ ரொனால்டோ உதவி புரிந்தார். ஆனால் கோல் அடிக்கவில்லை. இந்தப் போட்டியுடன் கோல் அடிக்காத போட்டி எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது. இதனால் ரொனால்டோ மனமுடைந்துள்ளார் என்று ரியல் மாட்ரிட் கப்டன் செர்ஜியோ ரமோஸ் கூறியுள்ளார். 


இதுகுறித்து ரமோஸ் கூறுகையில் "கிறிஸ்ரியானோ மற்றும் கரிம் பென்சிமாவின் கோல்கள் விரைவில் வரும். இந்த விடயத்தில் கரிம் பென்சிமா பெருந்தன்மையுடையவர். பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

ரொனால்டோ கோல் அடிக்காவிடில் மிகவும் மனமுடைந்து போவார். ஆனால் இவர்கள் கோல்கள் அடிக்காதது பற்றி நாங்கள் கவலையடையவில்லை' என்றார். 

 

TOTAL VIEWS : 136
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
h4mfr
  PLEASE ENTER CAPTA VALUE.