ரங்கன ஹேரத்தும் மூன்றாவது டெஸ்டில் இல்லை?
2017-08-08 16:21:59 | General

இலங்கை கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது குறித்து  கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  சிறந்த பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இந்தியாவுடனான முதல் இரு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி  மோசமான தோல்வியை சந்தித்து,மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 20 என  இழந்துள்ளது.


 இந்த நிலையில்  முதல் போட்டியில் படுகாயமடைந்த சகல துறை வீரர் அசேல குணரட்ண  தொடரிலிருந்து வெளியேறினார்.  இந்த டெஸ்ட் போட்டியில் நாலாம் நாள் ஆட்டத்தில்  கையில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்  ஓரளவு குணமாகி இரண்டாவது டெஸ்ட போட்டியில்  பங்குபற்றினார்.


மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில்  இலங்கை அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை நெரிவு காரணமாக  18.4 ஓவர்களுடன்  பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார்.
 இந்த நிலையில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காயம் காரணமாக  சுரங்க லக்மல்  அந்த தொடரில் பங்கேற்கவில்லை.


இந்த சூழ்நிலையில் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்  மூன்றாவது டெஸ்ட் போடியில் விளையாடும் சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.


முதுகுவலி காரணமாக  இவர் அவதிப்பட்டு வருவதால் ரங்கன ஹேரத்  இலங்கை அணியுடன்  இதுவரை கண்டி செல்லவில்லை. கண்டியில் எதிர்வரும் சனிக்கிழமை மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி  நடைபெறவுள்ளது. 


அசேல குணரட்ண, நுவான் பிரதீப்,  சுரங்க லக்மல்  வரிசையில் தற்போது ரங்கன ஹேரத்தும்  இணைந்து கொண்டுள்ளதால்  இலங்கை அணிக்கு  பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மூன்று போட்டிகளிலும் இலங்கையை  தோற்கடித்து  இலங்கை மண்ணில் அவர்களை வெள்ளையடிப்பதற்கு இந்திய அணி முனைந்து வருகையில்,  இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக  அடுத்தடுத்து வெளியேறுவது மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை தழுவக்கூடும் என்ற  நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

TOTAL VIEWS : 302
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
piww7
  PLEASE ENTER CAPTA VALUE.