பார்சிலோனா அணி வெற்றி
2017-03-20 17:54:47 | General

வாலன்சியா அணிக்கெதிரான “லா லிகா' கால்பந்து லீக் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் அடித்துக் கைகொடுக்க பார்சிலோனா அணி 42 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


ஸ்பெயினில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நடப்பு சம்பியன் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.


பார்சிலோனா நகரில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா  வாலன்சியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் பார்சிலோனா அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பார்சிலோனா சார்பில் லூயிஸ் சாரஸ் (35 ஆவது நிமிடம்), மெஸ்ஸி (45, 52 ஆவது நிமிடம், அன்ட்ரி கோமஸ் (89 ஆவது நிமிடம்) கோலடித்தனர். வாலன்சியா அணிக்கு மங்கலா (20 ஆவது நிமிடம்), முனீர் (45+ ஆவது நிமிடம்) ஆறுதல் தந்தனர்.


பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 28 லீக் போட்டிகளில் 19 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் கிறிஸ்ரியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி (27 போட்டி 20, வெற்றி, 5 டிரா, 2 தோல்வி ) 65 புள்ளிகளுடன் உள்ளது. 

TOTAL VIEWS : 311
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gyfe8
  PLEASE ENTER CAPTA VALUE.