பாக். அணியில் மாற்றமில்லை
2016-10-28 14:58:24 | General

மேற்கிந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) சென்றுள்ள பாகிஸ்தான், மேற்கிந்திய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன.


முதலிரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.


மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை 30 ஆம் திகதி சார்ஜாவில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அபுதாபியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் விளையாடிய அதே வீரர்கள் இப்போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தான் அணி: மிஸ்பா ( கப்டன்), அசார் அலி, சமி அஸ்லாம், யூனிஸ் கான், ஆசாத் ஷிபிக் , பாபர் அஸாம், சர்பராஸ் அகமது, முகமது நவாஸ், யாசிர் ஷா, ஜுல்பிகர் பாபர், முகமது ஆமிர், வாகாப் ரியாஸ், ரஹாத் அலி, இம்ரான் கான் சீனியர் , சோகைல் கான்.

TOTAL VIEWS : 1012
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
eksr2
  PLEASE ENTER CAPTA VALUE.