மீள் பிரவேசத்தில் அதிர்ச்சி
2018-01-02 11:35:40 | General

கண்காட்சி டெனிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்ததை அடுத்து அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் "நம்பர் வன்' டெனிஸ் வீராங்கனை அமெரிக்காவின் 
செரீனா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிபெற்ற போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அதன் பிறகு எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்த செரீனாவுக்கு செப்டெம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

மறுபடியும் டெனிஸ் களம் திரும்புவதற்காக கடந்த ஒரு மாதமாக பயிற்சியில் ஈடுபட்டார். இந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டிக்கு திரும்புவதற்கு முன்னோட்டமாக  அபுதாபியில் நடந்த கண்காட்சி டெனிஸ் போட்டியில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ், அதில் பிரெஞ் ஓப்பன் சம்பியனான ஆஸ்டாபென்கோவை (லத்வியா) எதிர்கொண்டார். 67 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஆஸ்டாபென்கோ 6 2,36,105 என்ற செட் கணக்கில் செரீனாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான செரீனாவிடம் வருகிற 15 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கும் அவுஸ்திரேலிய ஓப்பனில் கலந்துகொள்வீர்களா? என்று கேட்ட போது, அதில் கலந்துகொள்வது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 

TOTAL VIEWS : 95
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gva6b
  PLEASE ENTER CAPTA VALUE.