புதிய மைல்கல்லை எட்டிய தர்மசேனா
2018-01-02 11:31:26 | General

இலங்கை  அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேனா 50 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியவர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளவர் தர்மசேனா.

இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2009 இல் முதன் முதலாக இலங்கை  இந்தியா இடையிலான ஒருநாள் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

பின்னர் 2010 லிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் நடுவராக தர்மசேனா பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து  அவுஸ்திரேலிய அணிகளிடையிலான நான்காவது ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டி தர்மசேனா நடுவராக பங்கேற்ற, அவரின் 50 ஆவது போட்டியாக அமைந்தது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் நடுவர்களாக இருந்தவர்கள் பட்டியலில் தர்மசேனா 14 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 82 போட்டிகளுக்கும் ரி  20 கிரிக்கெட்டில் 22 போட்டிகளுக்கும் தர்மசேனா இதுவரை நடுவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 73
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ekmr0
  PLEASE ENTER CAPTA VALUE.