5 ரஷ்ய வீரர்களுக்கு வாழ்நாள் தடை
2017-11-29 09:47:48 | General

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேலும் ஐந்து ரஷ்ய வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுமம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் விளையாட்டு வீரர்களுக்கு 2011 மற்றும் 2015 ஆகிய காலப்பகுதிகளில், அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஊக்கமருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் இந்த ஐந்து பேரும் ஊக்கமருந்துகளைப் பாவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஊக்கமருந்து பாவனைக்காக  ஏற்கனவே நூற்றுக்கணக்கான ரஷ்யர்களுக்குதடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 132
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5ean
  PLEASE ENTER CAPTA VALUE.