சிம்பாப்வே தொடரில் குசல் பெரேரா இல்லை
2017-06-30 15:46:29 | General

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான குசல் பெரேரா சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பியன் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அரைச்சதம் அடித்த குசல் பெரேரா இடதுகாலில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறினார்.


இவரது காயம் குணமடைவதற்கு மேலும் 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும் என்பதால் தற்போது ஆரம்பமாகியுள்ள சிம்பாப்வே அணிக்குஎதிரான ஒருநாள் தொடரில் அவர் எந்தப் போட்டியிலும் ஆடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை சிம்பாப்வே தொடர் முடிவடைந்து இலங்கைக்கு இந்திய அணி வரவுள்ள நிலையில் அந்தத் தொடரிலும் குசல் பெரேரா ஆடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 குசல் பெரேரா தற்போது தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரது உடற் தகுதி குறித்து அவ்வப்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அணியின் உடற்பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 

TOTAL VIEWS : 213
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1ibsl
  PLEASE ENTER CAPTA VALUE.