போராடி தோற்றது இந்தியா; அமெரிக்காவுக்கு 2வது வெற்றி
2017-10-10 11:17:24 | General

புதுடெல்லி: பிபா யு17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த கொலம்பியாவுடன் மோதிய இந்தியா  12 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த விறுவிறுப்பான இப்போட்டியில், இடைவேளையின்போது இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் 00 என சமநிலை வகித்தன.

2வது பாதியில் கொலம்பியாவின் ஜுவன் பெனலோஸா 49வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணிக்கு 10 என முன்னிலை கொடுத்தார். 82வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜியாக்சன் அபாரமாக கோல் அடிக்க 11 என சமநிலை ஏற்பட்டது. அடுத்த நிமிடமே கொலம்பியாவுக்கு பெனலோசா 2வது கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் கொலம்பியா 21 என்ற கோல் கணக்கில் வென்றது.    
     
நவி மும்பையில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் பராகுவே 42 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. முன்னதாக நேற்று மாலை நடந்த லீக் ஆட்டங்களில், பி பிரிவில் மாலி அணி 30 என்ற கோல் கணக்கில் துருக்கியையும், ஏ பிரிவில் அமெரிக்க அணி 10 என்ற கோல் கணக்கில் கானா அணியையும் வீழ்த்தின. ஏ பிரிவில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த அமெரிக்கா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

TOTAL VIEWS : 109
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5lbr
  PLEASE ENTER CAPTA VALUE.