சங்கா, கெயில் நீக்கம்
2017-10-06 17:07:01 | General

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் மூன்றாவது தொடரில் கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து சங்ககார மற்றும் கிறிஸ் கெயில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது தொடர் அடுத்தாண்டு பெப்ரவரி  மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.


இதில் மொத்தம் ஆறு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இதில் முக்கிய அணியான கராச்சி கிங்ஸிலிருந்து குமார் சங்ககார, கிறிஸ் கெயில், பொலார்ட், சொயிப் மாலிக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இதை கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக சங்ககார செயற்பட்ட நிலையில், அவரால் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதேநேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியை கராச்சி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் அந்த அணியை வழிநடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TOTAL VIEWS : 188
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
j8gxv
  PLEASE ENTER CAPTA VALUE.