நெடுந்தீவு மகாவித்தியாலயம் கபடியில்; அசத்தல் வெற்றி
2017-03-22 19:33:33 | General

ச.ஜெயபாலன்

தீவக வலய ஆண்களுக்கான கபடிப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலயம் இரு வயதுப் பிரிவுகளிலும் வெற்றி வாகை சூடியது.


தீவகவலய பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டிகள் கடந்த 12ஆம் திகதி ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.


20 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி அணியும் நெடுந்தீவு மாகாவித்தியாலயம் அணியும் தெரிவாகின.


இப்போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி விலகல் முறையில் வெளியேறியதால் நெடுந்தீவு மகாவித்தியாலயம் வெற்றி பெற்றது.


நெடுந்தீவு மகாவித்தியாலயம் அரையிறுதியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியை வீழ்த்தி தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை 18 வயதுப் பிரிவினருக்கான கபடி இறுதிப் போட்டியில் புங்குடுதீவு மகாவித்தியாலய அணியை எதிர்கொண்ட நெடுந்தீவு மகாவித்தியாலய அணி அபார வெறிறிபெற்று தீவக சம்பியனாகியது.

TOTAL VIEWS : 497
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
loyb2
  PLEASE ENTER CAPTA VALUE.