மெஸ்ஸிக்கு திருமணம்
2017-06-12 17:36:19 | General

ஆர்ஜென்ரீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி தனது தோழியான  அன்டோனெல்லா ரோக்குஸ்ஸோவை இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இதற்காக மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோ தயாராகி வருகிறது. 


எதிர்வரும்  30 ஆம் திகதி மெஸ்ஸி  அன்டோனெல்லா ரோக்குஸ்ஸோ திருமணம் நடைபெறவுள்ளதை மெஸ்ஸியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணம் மெஸ்ஸியின்  30 ஆவது பிறந்த நாள் (ஜூன் 24) முடிவடைந்த அடுத்த ஒரு வாரத்தில் நடத்தப்படுகிறது. 


மெஸ்ஸியின் திருமணம் லத்தீன் அமெரிக்க முறையில் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் கொலம்பியாவின் பொப் பாடகி ஷகிரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸியின் சக வீரரான ஜெரார்ட் பைக்யூவின் மனைவிதான் ஷகிரா என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தத் திருமணத்தில் பார்சிலோனா அணி வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், செஸ்க் பப்ரே காஸ், சேவி ஹெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளக் கூடும் என ரொசாரியோவில் இருந்து வெளிவரும் லா கேபிடல் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 


மெஸ்ஸி  அன்டோனெல்லா ரோக்குஸ்ஸோ ஜோடிக்கு திருமணம் ஆகவில்லை. என்றாலும்  4 வயதில் தியாகோ என்ற மகனும் ஒரு வயதில் மேடியோ என்ற மகனும் உள்ளனர்.

TOTAL VIEWS : 230
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7lsfc
  PLEASE ENTER CAPTA VALUE.