இலங்கை அணியை வறுத்தெடுக்கும்ச மூக வலைத்தளங்கள்
2017-08-09 15:17:51 | General
இலங்கை கிரிக்கெட் அணியை சமூக வலைத்தளங்கள் மிகக் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சனம் செய்து வருவது குறித்து கிரிக்கெட் சபை விசனம் தெரிவித்துள்ளது.
 
இலங்கை அணி அண்மைக்காலமாக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்நிய மண்ணில் மட்டுமல்லாது தற்போது சொந்த மண்ணிலும் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருவதால்  இலங்கை அணி மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இலங்கையில் சிம்பாப்வேயுடனான தோல்வி அதன் பின் இந்தியாவுடனான மோசமான தோல்விகள் தொடர்பாக இலங்கை அணியினரையும் தேர்வுக் குழுவையும் அணி நிர்வாகத்தையும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சிப்பதுடன் கேலியும் கிண்டலுமான கருத்துகள் வெளியிடப்படுவது குறித்து கிரிக்கெட் சபை கவலையும் விசனமும் அடைந்துள்ளது.
 
சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாது  அரசியல்வாதிகளும் இலங்கை அணியை சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக வறுத்தெடுத்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 எனினும் இவ்வாறான விமர்சனங்கள் குறித்து மனதைத் தளரவிட வேண்டாமெனவும் அணியின் வெற்றிப் பாதை இவ்வாறான விமர்சனங்களுக்கு சரியான பதிலை அளிக்குமெனவும் தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, இலங்கை அணி மீள ஒன்றிணைந்து தனது திறமையை மீண்டும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மைக்காலத் தோல்விகளைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை, இலங்கை அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவர்களது மனோதிடத்தை அதிகரிக்கும் வகையிலான ஆலோசனைகளை அரவிந்த டி சில்வா வழங்கியிருந்தார். 
இதன்போதே இலங்கை அணியின் இளம் வீரர்கள் சொந்த மண்ணில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். 
TOTAL VIEWS : 291
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
w5qun
  PLEASE ENTER CAPTA VALUE.