புதிய இடத்தில் மத்யூஸ்
2017-11-10 10:23:39 | General

இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் கப்டனும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான அஞ்சலோ மத்யூஸ், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் புதிய இடத்தில் களமிறங்கவுள்ளார்.


காயம் காரணமாக நீண்டநாள் ஓய்விலிருந்த அஞ்சலோ மத்யூஸ், இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.


இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காயம் காரணமாக மத்யூஸ் 37 சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. 6 டெஸ்ட் போட்டிகள், 20 ஒருநாள் போட்டிகள், 11 ரி20 போட்டிகளில் இவர் இடம்பெறாதது அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. 


அண்மைக்காலமாக இலங்கை அணி  டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலையில் ஆடி வருகையில், தற்போது இலங்கை அணியில் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தி டெஸ்ட் போட்டியை ஐந்து நாள் வரை நீடித்து விளையாடும் விதத்தில் இலங்கை அணி தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் துடுப்பாட்ட வரிசை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 


வழமையாக மத்யூஸ் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி துடுப்பெடுத்தாடுவதுடன், பந்தும் வீசுவார். மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்ககார ஆகியோர் அணியில் இருந்த போது மத்யூஸ் ஆறாவது இடத்தில் களமிறங்கியிருந்தார்.  தற்போதைய நிலையில் அவர் நடுவரிசையில்  களமிறங்காது சற்று முன்னர் களமிறங்கும் விதத்தில் துடுப்பாட்ட வரிசையை மாற்றியமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கமைய இந்தியாவுடனான போட்டியில் புதிய ஆரம்ப துடுப்பாட்ட ஜோடிகளாக திமுத் கருணாரட்னவும் சதீர சமரவிக்ரமவும் களமிறங்கவுள்ளனர். மூன்றாவது வீரராக தனஞ்ஜய டி சில்வாவும் அதற்கு அடுத்து அஞ்சலோ மத்யூஸும் ஐந்தாவது இடத்தில் கப்டன் தினேஷ் சந்திமலும் அதன் பின்னர் நிரோஷன் திக்வெல்ல, கசுன் சானக்க, டில்ருவன் பெரேரா ஆகியோர் 6,7,8 ஆம் இடங்களிலும் களமிறங்கும் விதத்தில் துடுப்பாட்ட வரிசை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


அஞ்சலோ மத்யூஸ் முன்வரிசையில் களமிறங்கி நிலைத்து நின்று ஆடும் நிலை ஏற்பட்டால், அணிக்கு அது பெரிய வாய்ப்பாக அமையும். அவர் பின் வரிசையில் வந்து விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் தனித்து விடப்படுவதால் அது அணிக்கு ஓட்டங்கள் குவிப்பதை பாதித்து விடுகிறது. 


இதனால் அவரை முன்வரிசையில் களமிறக்கி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி நீண்டநேரம் இந்த ஜோடி களத்தில் இருப்பதன் மூலம் அதிக ஓட்டங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் புதிய துடுப்பாட்ட வரிசைப்படி வீரர்களை அனுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

TOTAL VIEWS : 176
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pti9k
  PLEASE ENTER CAPTA VALUE.