அப்ரிடியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது?
2016-10-28 17:25:18 | General

பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சைட் அப்ரிடியின் ஒப்பந்தத்தை நீடிக்காமல் இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.


இதையடுத்து சையிட் அப்ரிடியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சைட் அப்ரிடி ‘ருவென்ரி 20’ போட்டியில் மட்டும் விளையாடிவந்தார்.

ஆனாலும், அந்த அணியின் கப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பின்னர் அவரை ‘ருவென்ரி 20’ போட்டியிலிருந்தும் ஓய்வுபெறுமாறு கிரிக்கெட் சபை நிர்ப்பந்தித்து வந்தது. 


எனினும், தனக்கு உரிய முறையில் பிரியாவிடையளிக்கும் போட்டியொன்றை நடாத்தவேண்டுமென முதலில் கூறியிருந்த அப்ரிடி, பின்னர் ரி20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடப்போவதாக கூறியதால் அவர் தொடர்பான முடிவெடுப்பதில் சிக்கல்நிலை தோன்றியிருந்தது.


இந்த நிலையில், ரி20 போட்டிகளில் இருந்து அப்ரிடி ஓய்வுபெற மறுத்து வரவே அடுத்த வருடத்திற்கான வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலிலிருந்து, அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இவரைவிட இந்த ஒப்பந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் சையிட் அஜ்மலும் நீக்கப்பட்டுள்ளார்.

TOTAL VIEWS : 728
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1nily
  PLEASE ENTER CAPTA VALUE.