ரோஹித் புதிய சாதனை
2017-10-10 17:24:19 | General

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா சிக்ஸர் விளாசுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட  இந்திய வீரர் ரோகித் சர்மா தலா ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார். 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.


அவர் அடித்த ஒரு சிக்ஸர் மூலம் சர்வதேச அரங்கில் சிக்ஸர் மன்னனாக உலக சாதனை படைத்துள்ளார். அதாவது தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் 30 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.


முன்னதாக நியூஸிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் தொடர்ந்து 4 ஆண்டுகள் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த ஆண்டில் ரோகித் சர்மா மொத்தம் 30 சிக்ஸர்களை விளாசியுள்ள நிலையில் அதில் 29 சிக்ஸர்கள் ஒருநாள் போட்டியிலும் ஒரு சிக்ஸர் ரி20 போட்டியிலும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TOTAL VIEWS : 307
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jjns7
  PLEASE ENTER CAPTA VALUE.