இலங்கை அணி ஏன் தோற்கிறது?
2017-11-29 09:41:42 | General

போட்டி மிகுந்த முதல் தரப் போட்டிகள் இல்லாமையே இலங்கை அணி அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைய பிரதான காரணமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிக் போதா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் தரப் போட்டியான ரஞ்சிக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி 4 நாட்கள் இடம்பெறுவதுடன், காலிறுதிப் போட்டி 5 நாட்கள் பூராகவும் நடைபெறும். எனினும் இலங்கையின் முதல் தரப் போட்டிகள் 3 நாட்கள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

இதனுடன் அண்மையில் இந்தப் போட்டியில் பங்குகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதனால் போட்டியின் போட்டித்தன்மை சரிந்துள்ளது.

மேலும், நெருக்கடி மிகுந்த நேரங்களில் விளையாடக் கூடியவர்களே அணிக்குத் தேவை. அவ்வாறான வீரர்களையே தெரிவு செய்ய வேண்டும். பொலபொலவென உதிரும் வீரர்களால் எந்தப் பலனுமில்லை. நின்று நிலைத்து விளையாடக்கூடிய ஆற்றலுள்ளவர்களே தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் தேசிய முதல் தரப் போட்டிகளில் வலுவான பொறிமுறைகளை செயற்படுத்த வேண்டும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் முன்னாள் வேகப்பந்து வீச்
சாளர் சமிந்தவாஸும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

TOTAL VIEWS : 108
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
8nscs
  PLEASE ENTER CAPTA VALUE.