இனியாவது வெற்றி கிடைக்குமா?
2018-01-08 09:27:37 | General

இலங்கை அணி அடுத்தடுத்து அணித்  தலைவர்களை  மாற்றி வருகின்ற போதும் பலன் கிடைக்காதது குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் தலைவராக திசாரா பெரேராவை நியமித்த போதும், இலங்கை அணி வெற்றி பெறாததால் அவர் ஒருநாள் அணிக்கான தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 50, இந்தியாவுக்கு எதிராக 90, பாகிஸ்தானுக்கு எதிராக 80 என டெஸ்ட், ஒருநாள், ரி 20 என அனைத்து வித தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதனால் அவ்வணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணிக்கு தலைவராக திசாரா பெரேரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் தலைமையிலான இலங்கை அணியும் மோசமான தோல்வியை சந்தித்தால், தற்போது அவரும் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்குப் பதிலாக மத்யூஸ் அல்லது தினேஷ் சந்திமல் தலைவராக பொறுப்பேற்கலாம் என்று கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு முன்பாக மத்தியூஸ் தலைவர் பதவியில் இருந்தார். 

மேலும் கடந்த நான்கு மாதங்களில் இலங்கை அணி 10 தலைவர்களை மாற்றியுள்ளது. இப்படி அடுத்தடுத்து அணியின் தலைவர்களை இலங்கை அணி மாற்றினாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியைத் தவிர மற்ற தொடர்களில் வெற்றியை பெறமுடியாமல் இலங்கை அணி தவித்து வருகின்றது.

 

TOTAL VIEWS : 257
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pb9wj
  PLEASE ENTER CAPTA VALUE.