இலங்கையுடனான ஒருநாள் ரி-20; கோஹ்லி இல்லை
2017-08-11 10:19:46 | General

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் "ருவென்ரி  20' போட்டி தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய அணித் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 இந்தியக் கிரிக்கெட் இரண்டே நாட்களில் கலந்தாய்வு செய்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும்  ரி 20 போட்டிக்கான அணி வீரர்களை தெரிவு செய்யவுள்ளது. 


இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கும் புதிய அணித் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஹித் சர்மாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


எதிர்வரும் தொடர்களை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து இந்தியப் போட்டிகளிலும் ஓய்வில்லாமல் விளையாடி வரும் வீராட் கோஹ்லிக்கு சிறிது ஓய்வு கொடுக்க இந்தியக் கிரிக்கெட் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TOTAL VIEWS : 269
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ev4ia
  PLEASE ENTER CAPTA VALUE.