மார்ஷ் சகோதரர்கள் சாதனை
2018-01-08 09:25:42 | General

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்டில் ஷோன் மார்ஷ், மிட்சல் மார்ஷ் இருவரும் சதம் கடந்தனர்.

இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரே இனிங்ஸில் சதமடித்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 ஆவது சகோதரர்கள் என்ற பெருமை பெற்றனர்.

இதற்கு முன் இயன் சப்பல், கிரேக் சப்பல் மற்றும் ஸ்ரீவோ, மார்க்வோ இந்த இலக்கை எட்டியிருந்தனர். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய 8 ஆவது சகோதரர்கள் என்ற பெருமை பெற்றனர்.

முதல் பந்து வீச்சாளர்; இப்போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து "சுழல்' வீரர் மாசன் கிரேன் முதல் இனிங்ஸில் 48 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 193 ஓட்டம் கொடுத்தார்.

இதன்மூலம் அறிமுக டெஸ்டில் அதிக ஓட்டங்கள் கொடுத்த முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்தார்.

இதற்கு முன் டேவோன் 44 ஓவரில் 166 ஓட்டம் கொடுத்ததே அதிகமாக (எதிர்  ஆஸி. நொட்டிங்காம், 1989) இருந்தது.

 

TOTAL VIEWS : 160
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3ykdn
  PLEASE ENTER CAPTA VALUE.