இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து கடும் போராட்டம்
2018-01-08 09:15:29 | General

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்டில் ஷோன் மார்ஷ், மிட்சல் மார்ஷ் சதம் கடக்க, அவுஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளதுடன், இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது. 

அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் அவுஸ்திரேலியா 3 0 என முன்னிலையில் உள்ளது. 

 ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. இங்கிலாந்து முதல் இனிங்ஸில் 346 ஓட்டங்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 4 விக்கெட்டுக்கு  479 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஷோன் மார்ஷ் (98) , மிட்சல் மார்ஷ் (63) அவுட்டாகாமல் இருந்தனர். 

நேற்று  ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. சகோதரர்களான ஷோன் மார்ஷ், மிட்சல் மார்ஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தது. இருவரும் சதம் கடந்தனர். கரான் வேகத்தில் மிட்சல் மார்ஷ் (101) ஆட்டமிழந்தார். ஷோன் மார்ஷ்  156 ஓட்டம் எடுத்தார். ஸ்டார்க் ( 11) நிலைக்கவில்லை.

அவுஸ்திரேலிய அணி  முதல் இனிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 649 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பெய்ன் (38), கம்மின்ஸ் (24) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி  2 விக்கெட் வீழ்த்தினார். 

பின் இரண்டாவது இனிங்ஸை தொடக்கிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டோன்மேன் (0) , அலெஸ்டர் குக் (10) ஏமாற்றினர். வின்சி  18 ஓட்டங்களில் திரும்பினார். மாலன் (5) ஒற்றை இலக்கில் வெளியேறினார்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இனிங்ஸில்  4 விக்கெட்டுக்கு  93 ஓட்டங்கள் எடுத்து 210 ஓட்டங்கள் பின்தங்கியிருந்ததுடன், இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. கப்டன் ரூட் (42), பேர்ஸ்டோவ் ( 17) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

TOTAL VIEWS : 122
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
y0bts
  PLEASE ENTER CAPTA VALUE.