இலங்கை அணியின் பயிற்சியாளராவதற்கு ஆஸி.யின் முன்னாள் வீரர்கள் ஆர்வம்
2017-11-08 09:40:24 | General

இலங்கை கிரிக்கெட் அணியில் பிரதம பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் பலர் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை அணியின் பிரதம பயிற்சியாளராக இருந்த கிரஹாம் போல்ட் இவ்வருட முற்பகுதியில் அணியிலிருந்து வெளியேறியதையடுத்து உடற்பயிற்சியாளர் நிக்போத்தா இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 


இலங்கை அணி கிரஹாம் போல்ட் வெளியேறிய பின் தொடர்ந்து படுமோசமான தோல்விகளை தழுவிவரும் நிலையில், அணிக்கு புதிய பிரதம பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக கிரிக்கெட் சபை பலரிடமிருந்தும் விண்ணப்பங்களை பெற்றுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்பட்டு விடுவார் என தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், இலங்கை அணியின் பிரதம பயிற்சியாளர் ஆவதற்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் சிலர் ஆர்வம் காட்டுவதாக தெரியவருகிறது. 


முன்னாள் வீரர்களான டீன் ஜோன்ஸ், ஜாஸன் கிலெஸ்பி மற்றும் அன்ரூ மக்டொனால்ட் ஆகியோர் அவர்களில் சிலர் என தெரிவிக்கப்படுகிறது.
டீன் ஜோன்ஸ் முன்னாள் பிரபல துடுப்பாட்ட வீரர் ஆவார். 52 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.


இதேவேளை, 42 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் கிலெஸ்பி 71 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு ரி20 போட்டியில் பங்கேற்றுள்ளார்.
விக்டோரியா அணியின் பயிற்சியாளரான அன்ரூ மக்டொனால்ட் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 


இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராவதற்கு விண்ணப்பித்த பலர் ஏற்கனவே நேர்முகத் தேர்வுக்கு தோற்றியுள்ளனர். மேற்படி அவுஸ்திரேலிய வீரர்களும் நேர்முகத் தேர்வுக்கு வந்தார்களா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

TOTAL VIEWS : 168
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b1ssl
  PLEASE ENTER CAPTA VALUE.