ஜேர்மனியின் கெர்பர் முதலிடத்தில்
2017-05-16 17:14:06 | General

டபிள்யூ. டி.ஏ. ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜேர்மனி வீராங்கனை கெர்பர் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார்.

டெனிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு. டி.ஏ. வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 2 ஆவது இடத்திலிருந்து மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தார்.


விரைவில் தாயாக உள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சமீபகாலமாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காததால் 2 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


மார்ரிட் ஓப்பனில் பட்டம் வென்ற ருமேனியாவின் சிமோனா ஹலெப் 8 ஆவது இடத்திலிருந்து 4 ஆவது இடத்துக்கு முன்னேறினார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 10 ஆவது இடம்,

முதல் 10 பட்டியலில் இடம் பிடித்தார். ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா 7 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் அமெரிக்காவின் பெதானி மாட்டெக் சாண்ட்ஸ் உள்ளார்.

 

TOTAL VIEWS : 399
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s7vpj
  PLEASE ENTER CAPTA VALUE.