புங்குடுதீவு மகாவித்தியாலயம் அசத்தல்
2017-03-22 19:10:38 | General

 ச.ஜெயபாலன்

தீவக வலய மட்ட பெரு விளையாட்டுப் போட்டியில் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அபார சாதனை.

2017 ஆம் ஆண்டுக்கான தீவக வலைய மட்ட பாடசாலை களுக்கிடையிலான பெரு விளையாட்டு போட்டிகள் கடந்த 10.03.2017 தொடக்கம் 17.03.2017 வரை, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில்  புங்குடுதீவு மகாவித்தியாலம் பல கரப்பந்து உதைப்பந்து, எல்லே கபடி போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளன.

20 வயதுப் பிரிவு பெண்களுக்கான எல்லே போட்டியில் முதலாம் இடத்தினையும், 20 வயதுப் பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினையும், 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினையும்,16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினையும்,16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தினையும், 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப் பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.


குடந'த காலங்களைவிட இம்முறை புங்குடுதீவு மகாவித்தியாலயம் அதிக வெற்றிகளை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

TOTAL VIEWS : 366
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b8mwo
  PLEASE ENTER CAPTA VALUE.