"அணித் தேர்வில் தலையிடுவதில்லை"
2017-11-08 09:53:44 | General

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தேர்வில் தலையிடுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கப்டன் சுமித் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கப்டன் ஸ்ரீவன் சுமித் அணித் தேர்வில் தலையிடுவதாகவும் தனக்கு பிடித்தமான வீரர்களுக்கு களம் காணும் அணியில் வாய்ப்பு கொடுப்பதாகவும் சில முன்னாள் வீரர்களும் ஊடகத்தினரும் விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து ஸ்ரீவன் சுமித்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு பிடித்தமானவர்களை அணிக்கு தேர்வு செய்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாரும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை.

அணித் தேர்வில் தலையிடுவதற்கு நான் ஒன்றும் தேர்வாளர் கிடையாது.  அதேசமயம் எனது பார்வையில் சில விடயங்களை தேர்வாளர்களிடம் சொல்வேன் என்றார். 

TOTAL VIEWS : 155
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9onfp
  PLEASE ENTER CAPTA VALUE.