ஓட்டம் எதுவும் கொடுக்காது ரி-20 இல் 10 விக்கெட் சாதனை
2017-11-10 10:29:14 | General

உள்ளூர் ருவென்ரி  20 போட்டியில் இளம் வீரர் ஆகாஷ் சௌத்ரி 4 ஓவரில் ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 


 ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், திஷா கிரிக்கெட் அக்கடமி , பியர்ல் அக்கடமி அணிகள் மோதிய உள்ளூர் ருவென்ரி  20 போட்டி நடந்தது.

நாணயச் சுழற்சியில் வென்ற பியர்ல் அக்கடமி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய திஷா கிரிக்கெட் அக்கடமி, 20 ஓவரில் 156 ஓட்டங்கள் எடுத்தது. பின் களமிறங்கிய பியர்ல் அக்கடமி அணி 36 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 


இதில், திஷா அக்கடமி சார்பில் அசத்திய 15 வயது இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் சௌத்ரி, 4 மெய்டன் ஓவர்கள் வீசி, பியர்ல் அணியின் 10 விக்கெட்டுகளையும் அப்படியே அள்ளினார். 


இவர் தனது முதல் மூன்று ஓவர்களில் தலா  2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின் 4 ஆவது மற்றும் கடைசி ஓவரில் "ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட் வீழ்த்தினார். 
ரி  20 யில் ஒரு வீரர்  4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசலாம். அந்த 4 ஓவரில் இவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

TOTAL VIEWS : 198
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lwxp2
  PLEASE ENTER CAPTA VALUE.