பகல்இரவு டெஸ்டில் இன்று மோதும் இலங்கைபாகிஸ்தான் அணிகள்
2017-10-06 11:32:34 | General

இலங்கை  பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை  பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி கடும் போராட்டத்தின் மத்தியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 


இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையே டுபாயில் இன்று 2 ஆவது டெஸ்ட்போட்டி ஆரம்பமாகவுள்ளது. முதல் முறையாக இவ்விரு  அணிகளும் பங்கேற்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. 


பிங் நிறப்பந்தில் இரு அணி வீரர்களும் முதல் முறையாக இந்த டெஸ்டில் மோதவுள்ளனர். வழமையாக பகல் நேர டெஸ்ட் போட்டியில் 
சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இரவுப் போட்டிக்கு பிங் நிறப் பந்து பயன்படுத்தப்படவுள்ளது.


இரு அணிகளுக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி முதன்முறை என்பதால் இவர்கள் எவ்வாறு ஆடுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதால் இன்று தொடங்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் அல்லது வெற்றி தோல்வியின்றி போட்டியை முடித்துக் கொண்டால் இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடும்.


ஏற்கனவே, முதல் டெஸ்டில் மிகச் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு இந்தப் போட்டியிலும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்றார். அவரது சுழல் பந்து வீச்சுத் திறமை இந்தப் போட்டியிலும் சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் தங்கள் திறமையை சற்று மேம்படுத்தினால் பாகிஸ்தான் அணிக்கு 2 ஆவது டெஸ்டிலும் கடும் நெருக்கடியை கொடுக்க முடியும். 
முதல் டெஸ்டில் தோல்வியடைந்ததால் தொடரை இழக்காதிருக்க இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இன்று பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பாகிஸ்தான் அணி கவனத்தை செலுத்த வேண்டிய நிலையில் அவர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட முயற்சிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

TOTAL VIEWS : 208
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5ckuf
  PLEASE ENTER CAPTA VALUE.