மலிங்க மீண்டும் சர்ச்சையில்
2017-06-30 15:58:12 | General

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


சம்பியன் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியிருந்ததுடன் இலங்கை பந்துவீச்சாளர்கள் பானை வயிற்றுடன் பந்துவீச முடியாது தடுமாறுவதாகவும் கூறியிருந்தார்.


அவரது இந்த கருத்து தொடர்பாக மலிங்க ஊடகமொன்றுக்கு கடுமையான கருத்தை தெரிவித்திருந்ததுடன், விளையாட்டுத்துறை அமைச்சரை குரங்கு என்று தெரிவித்த கருத்தால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுமுள்ளார்.


இந்த நிலையில் காலியில் நேற்று ஆரம்பமாகிய சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டிக்காக இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மலிங்கவும் அந்தப் பயிற்சியில் பங்கேற்றிருந்தார். 


இலங்கை வீரர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புகைப்பட ஊடகவியலாளர்கள்  படம் பிடித்துக் கொண்டிருந்த போது சீற்றமடைந்த மலிங்க, தனது ஜேர்சியை மேலே தூக்கி வயிற்றைக் காட்டி இதனை படம் பிடிக்க எல்லோரும் காத்திருக்கிறார்கள் என கூறி புகைப்பட ஊடகவியலாளர்களை சாடியிருந்தார்.

 
மலிங்கவின் இந்தப் படமும் அவர் புகைப்பட ஊடகவியலாளர்களுடன் மோசமாக நடந்து கொண்டது தொடர்பாகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மலிங்க மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிரான கருத்துக்காக அவருக்கு ஆறு மாத ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் அவர் ஒழுக்கவிதிகளை மீறும் பட்சத்தில் உடனடியாக ஒரு வருடத் தடை அமுலுக்கு வரும் என்ற நிலையில் மலிங்க மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

TOTAL VIEWS : 549
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
mkvp2
  PLEASE ENTER CAPTA VALUE.